CURIOSITY

கியூரியாசிட்டியின் புதிய கண்டுபிடிப்பு : செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் கியூரியாசிடி (Curiosity) விண்கலம் சமீபத்தில் கண்டுபிடித்த சிறிய பாறை நாசா விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கியூரியாசிடி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கால் பந்து அளவிலான பாறை ஒன்றினை கண்டுபிடித்தது. இந்த பாறையை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை மற்றவைகளை போல் அல்லாமல், சோடியம் மற்றும் பொட்டாஷியம் நிறைந்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த பாறை ஹவாய் தீவுகளில் காணப்படும் எரிமலை பாறைகளை போல உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வகை பாறைகள் பூமிக்கு அடியில் மிகுந்த அழுத்தம் காரணமாக உருவாகும் என்றும் கூறியுள்ளனர். இந்த வகை பாறைகளில் முன்பு நீர் இருத்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment